டி20 உலக கோப்பை: அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Nov 7, 2022, 7:34 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

க்ரூப் 1ல் முதலிடம் பிடித்த நியூசிலாந்து மற்றும் க்ரூப் 2ல் 2ம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி வரும் 9ம் தேதி சிட்னியில் நடக்கிறது. க்ரூப் 2ல் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் க்ரூப் 1ல் 2ம் இடம்பிடித்த இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி வரும் 10ம் தேதி அடிலெய்டிலும் நடக்கிறது. 

இந்த உலக கோப்பையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா நெதர்லாந்திடம் அடைந்த அதிர்ச்சி தோல்வியின் காரணமாக கடைசி நேரத்தில் அரையிறுதிக்கு முன்னேறியது.

T20 World Cup: இவர் சரிப்பட்டு வரமாட்டார்.. அரையிறுதியில் அவரை ஆடவைங்க! இந்திய அணிக்கு கபில் தேவ் அட்வைஸ்

நியூசிலாந்து அணி வலுவான மற்றும் நல்ல பேலன்ஸான அணியாக திகழ்கிறது. தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்கின்றனர். குறிப்பாக இளம் தொடக்க வீரர் ஃபின் ஆலன் அபாரமாக ஆடிவருகிறார். அவர் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால் தான், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் சூப்பர் 12 போட்டியில் 200 ரன்களை குவித்து, 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார  வெற்றி பெற்றது.

மிடில் ஆர்டரில் க்ளென் ஃபிலிப்ஸ் செம ஃபார்மில் இருக்கிறார். இந்த உலக கோப்பையில் ஒரு சதமும் அடித்திருக்கிறார். டேரைல் மிட்செலும் ஓரளவிற்கு நன்றாக ஆடிவருகிறார். முக்கியமான போட்டிகளில் சிறப்பாக ஆடும் திறமை வாய்ந்தவர் மிட்செல். கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபார்ம் தான் கவலையளித்தது. ஆனால் அவரும் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். எனவே பேட்டிங் ஆர்டர் நியூசிலாந்து அணிக்கு வலுவாகவே உள்ளது. அதனால் அரையிறுதி போட்டியில் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது.

மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி ஆகிய 2 ஸ்பின்னர்களும் வழக்கம்போலவே அபாரமாக பந்துவீசி மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்திவருகின்றனர். டிரெண்ட் போல்ட் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். டிம் சௌதி மற்றும் லாக்கி ஃபெர்குசனும் நன்றாக பந்துவீசிவருகின்றனர். 6வது பவுலிங் ஆப்சனான ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்கிறார். எனவே நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

டி20 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான்.. இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்தை எச்சரிக்கும் மேத்யூ ஹைடன்

உத்தேச நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன்.
 

click me!