T20 World Cup: இவர் சரிப்பட்டு வரமாட்டார்.. அரையிறுதியில் அவரை ஆடவைங்க! இந்திய அணிக்கு கபில் தேவ் அட்வைஸ்

By karthikeyan V  |  First Published Nov 7, 2022, 7:17 PM IST

டி20 உலக கோப்பை அரையிறுதியில் அஷ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்கலாம் என்று கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.
 


டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. க்ரூப் 1ல் முதலிடத்தை பிடித்த நியூசிலாந்து மற்றும் க்ரூப் 2ல் 2ம் இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி வரும் 9ம் தேதி சிட்னியில் நடக்கிறது. க்ரூப் 2ல் முதலிடத்தை பிடித்த இந்தியா மற்றும் க்ரூப் 1ல் 2ம் இடம்பிடித்த இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி வரும் 10ம் தேதி அடிலெய்டில் நடக்கிறது. 

இந்திய அணி இந்த உலக கோப்பையில் வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், சில குறைகள் இருப்பதையும் மறுக்கமுடியாது. தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. அதனால் தான் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் ரிஷப் பண்ட் ஆடினார்.

Latest Videos

undefined

T20 World Cup: அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்! உத்தேச ஆடும் லெவன்

பும்ரா இல்லாமல் இருந்தாலும் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் சிறப்பாக பந்துவீசிவருகிறது. புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் சிறப்பாக பந்துவீசிவருகின்றனர். பும்ரா இல்லாததால் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை நினைத்து பயந்த அளவிற்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ஸ்பின் பவுலிங் யூனிட் தான் சோபிக்கவில்லை.

சீனியர் பவுலர், அனுபவமிக்கவர் என்ற வகையில் அஷ்வினை இந்திய அணி ஆடவைக்கிறது. ஆல்ரவுண்டர் ஜடேஜாவிற்கு மாற்று வீரராக அக்ஸர் படேல் ஆடுகிறார். ஆனால் அஷ்வின் - அக்ஸர் ஸ்பின் ஜோடி அவர்களது பணியை சரியாக செய்யவில்லை. ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி கொடுப்பது அணியின் வெற்றிக்கு முக்கியம். ஆனால் அஷ்வினும் அக்ஸரும் இதுவரை பெரிதாக விக்கெட் வீழ்த்தவில்லை. அஷ்வின் 4 போட்டிகளில் வெறும் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்தினார். அதை அவர் வீழ்த்தினார் என்று கூறுவதை விட, பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுக்கு தகுதியில்லாத பந்துகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் என்றுதான் சொல்லவேண்டும். 

அஷ்வின் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி கொடுக்க முடியாமல் திணறுகிறார். அவரது பவுலிங் பேட்ஸ்மேன்களுக்கு பிரச்னையாகவே இல்லை. அஷ்வின் பவுலிங்கை எதிரணி பேட்ஸ்மேன்கள் எந்தவித பயமோ பதற்றமோ, உறுத்தலோ இல்லாமல் எளிதாக எதிர்கொண்டு ஆடுகின்றனர். எனவே இந்திய அணி கண்டிப்பாக இந்த பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. 

அஷ்வினுக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்கலாம் என்பதே முன்னாள் ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது. ரஷீத் கான், ஷதாப் கான், ஷம்ஸி, இஷ் சோதி, அடில் ரஷீத், ஆடம் ஸாம்பா என இந்த உலக கோப்பையில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சோபித்திருக்கிறார்கள். எனவே அந்தவகையிலும், இந்திய அணியின் சமீபத்திய முன்னணி ஸ்பின்னர் என்றவகையிலும், ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரிதானவை என்பதாலும் தாராளமாக யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்கலாம் என்று ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறியிருந்தனர்.

இப்போது கபில் தேவும் அதைத்தான் கூறுகிறார். இதுகுறித்து பேசிய கபில் தேவ், இந்த உலக கோப்பையில் அஷ்வின் இதுவரை எனக்கு நம்பிக்கையளிக்கவில்லை. அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் இந்த பந்துக்கெல்லாம் விக்கெட்டா என்று அவரே ஆச்சரியப்படும் அளவிற்குத்தான் விக்கெட் கிடைத்தது. விக்கெட் வீழ்த்துவதுதான் ஒரு பவுலருக்கு நம்பிக்கையளிக்கும். அஷ்வின் ரிதத்திலேயே இல்லை. 

டி20 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான்.. இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்தை எச்சரிக்கும் மேத்யூ ஹைடன்

அஷ்வினுக்கு பதிலாக சாஹலை எடுக்கலாம். ஆனால் அது அணி நிர்வாகத்தின் முடிவு. அஷ்வின் மீது அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையிருந்தால் நல்லதுதான். இந்த தொடர் முழுதும் அஷ்வின் தான் ஆடியிருக்கிறார். எனவே எதிரணியை சர்ப்ரைஸ் செய்ய நினைத்தால் கண்டிப்பாக சாஹலை ஆடவைக்கலாம். கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றவர் ஆடுவார் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
 

click me!