4வது டி20 போட்டி.. ஆல்ரவுண்டரை அடித்து தூக்கி நியூசிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Jan 31, 2020, 10:25 AM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 4வது டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுள்ளது. நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் முதன்முறையாக இந்திய அணியிடம் டி20 தொடரை இழந்துள்ளது. 

மூன்றாவது போட்டியில் வெற்றியை நெருங்கிய நியூசிலாந்து அணி, நூலிழையில் அதை தவறவிட்டது. அந்த போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சனை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. இந்நிலையில், கடைசி 2 போட்டிகளில் ஆறுதல் வெற்றியாவது பெற்று மானத்தை காப்பாற்றிக்கொள்ளும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது. 

ஆனால் அதேவேளையில் எஞ்சிய 2 போட்டிகளிலும் வென்று 5-0 என நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

இந்நிலையில், 4வது டி20 போட்டி இன்று வெலிங்டனில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட் ஹோமிற்கு பதிலாக பேட்டிங் - ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் டாம் ப்ரூஸ் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

அதேபோல ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில், இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட டேரைல் மிட்செல் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

4வது டி20 போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), டாம் ப்ரூஸ், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, குஜ்ஜெலின், டேரைல் மிட்செல். 
 

click me!