4வது டி20 போட்டி.. இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. 3 வீரர்களுக்கு வாய்ப்பு

By karthikeyan VFirst Published Jan 31, 2020, 9:56 AM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 4வது டி20 போட்டியில், முதல் மூன்று போட்டிகளில் ஆடாத இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுள்ளது. முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணி முதல் 3 போட்டிகளிலுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டது. அதனால் அந்த அணியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 

இந்திய அணி முதல் 3 போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்டதால், கடைசி 2 போட்டிகளில், முதல் 3 போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பளிக்கப்படும் என்பது தெரிந்ததுதான். அதை கேப்டன் கோலியும் உறுதி செய்திருந்தார். மூன்றாவது போட்டிக்கு பின் பேசிய கேப்டன் கோலி, சைனி மற்றும் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதை உறுதி செய்திருந்தார். 

சஞ்சு சாம்சனை பற்றி கேப்டன் கோலி எதுவும் சொல்லவில்லை என்றாலும், அவருக்கும் கடைசி 2 போட்டிகளில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட வாய்ப்புள்ளது. ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு சைனியும், சாஹலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும், ஷிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. 

4வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, ஷமி, பும்ரா. 
 

click me!