எல்லா வீரர்களின் பங்களிப்புடன் தட்டுத்தடுமாறி நல்ல ஸ்கோரை அடித்த நியூசிலாந்து! பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published Jan 9, 2023, 7:34 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 255 ரன்கள் அடித்து, 256 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்ததால் கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன.

அதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஹாரிஸ் சொஹைல், அகா சல்மான், முகமது நவாஸ், உஸாமா மிர், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப்.

தோனி பாணியில் கேப்டன்சியை பாண்டியாவிடம் ஒப்படைங்க..! ரோஹித்துக்கு நெருக்கடி

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), டேரைல் மிட்செல், க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், ஹென்ரி ஷிப்லி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர டெவான் கான்வே ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஃபின் ஆலன் 29 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கேன் வில்லியம்சன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டேரைல் மிட்செல், க்ளென் ஃபிலிப்ஸ், டாம் லேதம், பிரேஸ்வெல் ஆகிய வீரர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் அவர்கள் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறிவிட்டனர்.

நான் இன்றைக்கு நல்ல கேப்டனா இருக்கேன்னா, அதுக்கு ஆஷிஷ் நெஹ்ரா தான் காரணம் - ஹர்திக் பாண்டியா

டேரைல் மிட்செல் 36 ரன்களும், டாம் லேதம் 42 ரன்களும், க்ளென் ஃபிலிப்ஸ் 37 ரன்களும், பிரேஸ்வெல் 43 ரன்களும் அடிக்க, 50 ஓவரில் 255 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி, 256 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது. இவர்களில் ஒருசிலர் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தால் 300 ரன்களுக்கு மேல் குவித்து கடினமான இலக்கை நிர்ணயித்திருக்கும்.
 

click me!