அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதானது நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா நடத்தும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நியூசிலாந்து அணியானது 10 புள்ளிகள் பெற்றும், அரையிறுதிப் போட்டிக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளின் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நியூசிலாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா 9 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 565 ரன்கள் குவித்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் – சவுரவ் கங்குலி உறுதி!
இந்த நிலையில் தான் அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருது ரச்சின் ரவீந்திராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை செயல்பாடுகளின் அடிப்படையில் கடந்த மாதத்திற்கான சிறந்த வீரர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த மாதத்தில் 6 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் வீசிய 383 பந்துகளில் 21 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் மட்டுமே கொடுத்துள்ளார். மேலும், 383 பந்துகளில் 268 பந்துகளை டாட் பந்துகளாகவும் வீசியுள்ளார். இந்த நிலையில், தான் பந்துவீச்சாளர்களில் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
South Africa vs Afghanistan: அரையிறுதிக்கான கடைசி வாய்ப்பு: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்!
இதே போன்று பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவின் குயீண்டன் டி காக் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் டி காக் 6 போட்டிகளில் 3 சதம் உள்பட 431 ரன்கள் குவித்திருந்தார். ரச்சின் ரவீந்திரா 6 போட்டிகளில் 406 ரன்கள் குவித்து சில போட்டிகளில் நாட் அவுட்டாக இருந்ததால், அவரது சராசரி டி காக்கை விட அதிகமாக 81.20 ஆக இருந்துள்ளது. விக்கெட் மற்றும் எகானமியில் பும்ரா தான் முன்னணியில் இருந்தார். ஆனால், அவருக்கு சிறந்த வீரர் விருது வழங்கப்படவில்லை. அதிக பேட்டிங் சராசரி வைத்திருந்த ரச்சின் ரவீந்திராவிற்கு சிறந்த வீரர் வழங்கப்பட்டுள்ளது.