அவ்வளவு ஈசியா ஜெயிச்சுடலாம்னு நெனச்சீங்களா..? கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் நியூசிலாந்து பேட்டிங்

By karthikeyan VFirst Published Jan 4, 2020, 3:30 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் நியூசிலாந்து தொடக்க வீரர்கள் நிதானமாக தொடங்கினர். 
 

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. 

சிட்னியில் கடந்த 4ம் தேதி(நேற்று) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மார்னஸ் லபுஷேனின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 454 ரன்களை குவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

நியூசிலாந்து அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய இரண்டு முக்கியமான வீரர்களும் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. டிரெண்ட் போல்ட்டும் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. மிட்செல் சாண்ட்னெர் மற்றும் டிம் சௌதி ஆகிய இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டு சோமர்வில்லி, ஆஸ்டில் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையில், நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர்களான டாம் லேதம், ரோஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பாக ஆடியாக வேண்டும். அப்போதுதான் அணியை காப்பாற்ற முடியும். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 454 ரன்களை குவித்த நிலையில், முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டாம் பிளண்டெல் ஆகிய இருவரும் நிதானமாக தொடங்கி தெளிவாக ஆடிவருகின்றனர். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தில் 29 ஓவர்களை எதிர்கொண்ட லேதமும் பிளண்டெலும் விக்கெட்டை விட்டுக்கொடுத்துவிடாமல் கவனமாகவும் சிறப்பாகவும் ஆடி ஸ்கோர் செய்தனர். மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், பாட்டின்சன் ஆகியோரிடம் சிக்கிவிடாமல் அபாரமாக ஆடினர். 

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி முதல் இன்னிங்ஸில் 63 ரன்களை அடித்தது. டாம் லேதம் 26 ரன்களுடனும் டாம் பிளண்டெல் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் இதே மாதிரி மூன்றாம் நாள் ஆட்டத்திலும் சிறப்பாக ஆடும்பட்சத்தில், நியூசிலாந்து அணி இந்த போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். 
 

click me!