NZ vs SL: நியூசிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு! டாம் லேதம் கேப்டன்.. ஐபிஎல்லுக்காக சர்வதேச தொடரிலிருந்து விலகல்

Published : Mar 14, 2023, 02:34 PM IST
NZ vs SL: நியூசிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு! டாம் லேதம் கேப்டன்.. ஐபிஎல்லுக்காக சர்வதேச தொடரிலிருந்து விலகல்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் ஆடுவதற்காக கேன் வில்லியம்சன் இந்த தொடரிலிருந்து விலகியதால் டாம் லேதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் முடிந்ததும், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடக்கின்றன.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 25ம் தேதி ஆக்லாந்திலும், 28 மற்றும் 31ம் தேதிகளில் முறையே  கிறிஸ்ட்சர்ச் மற்றும் ஹாமில்டனில் நடக்கின்றன.

எல்லா டீமும் பாகிஸ்தானுக்கு வரும்போது இந்தியாவிற்கு மட்டும் பாதுகாப்பு பிரச்னையா..? PCB தலைவர் கேள்வி

இந்த ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஐபிஎல்லில் ஆடுவதற்காக இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார். அதனால் டாம் லேதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

IND vs AUS: பசங்க பட்டைய கிளப்பிட்டாங்க.. ஆஸி., வீரர்கள் மூவருக்கு ராகுல் டிராவிட் புகழாரம்

நியூசிலாந்து ஒருநாள் அணி:

டாம் லேதம் (கேப்டன்), ஃபின் ஆலன், டாம் பிளண்டெல், சாட் பௌவ்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்ரி, பென் லிஸ்டர், டேரைல் மிட்செல், ஹென்ரி நிகோல்ஸ், க்ளென் ஃபிலிப்ஸ், ஹென்ரி ஷிப்லி, இஷ் சோதி, பிளைர் டிக்னெர், வில் யங்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!