Tim Southee 150: வரலாற்று சாதனை படைத்த டிம் சவுதி – டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!

By Rsiva kumar  |  First Published Jan 12, 2024, 9:09 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில் டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷாகீன் அஃப்ரிடி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 61 ரன்கள் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 57 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

கணுக்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு பயிற்சியை தொடங்கிய சூர்யகுமார் யாதவ் – பேப் ஸ்டெப்ஸ் வீடியோ பதிவிட்ட ஸ்கை!

Tap to resize

Latest Videos

பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் மட்டுமே அரைசதம் அடித்துக் கொடுத்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 3ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். பாபர் அசாம் தவிர மற்ற வீரர்களான சைம் அயூப் (27), முகமது ரிஸ்வான் (25), இப்திகார் அகமது (24) ஆகியோர் ஓரளவு கை கொடுத்தாலும் பாகிஸ்தான் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்து 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆஸியிடம் வாங்கிய அடி பத்தாதுன்னு இப்போ நியூசியிடம் அடி வாங்கும் பாகிஸ்தான் – முதல் டி20 நியூசி, வெற்றி!

இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அஃப்ரிடியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர், முதலில் 3 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். 

ஜிம்பாப்வேயை வச்சு செஞ்ச வணிந்து ஹசரங்கா – அசால்டா 7 விக்கெட் எடுத்து சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 151 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 374 விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட்டில் 221 விக்கெட்டுகளும், டி20 கிரிக்கெட்டில் 151 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இவரைத் தொடர்ந்து வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுகள் கைப்பற்றி 2ஆவது இடத்தில் இருக்கிறார். இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகள் கைப்பற்றி 13ஆவது இடத்திலும், புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகள் கைப்பற்றி 18ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஹெலிகாப்டரில் பறந்து வந்து மைதானத்தில் தரையிறங்கிய டேவிட் வார்னர் – வைரலாகும் வீடியோ!

click me!