ஆர்சிபி வீரரை தொடர்ந்து கேகேஆர் வீரருக்கும் கொரோனா டெஸ்ட்.. தனிமைப்படுத்தப்பட்ட ஃபாஸ்ட் பவுலர்

By karthikeyan VFirst Published Mar 14, 2020, 9:50 AM IST
Highlights

கேன் ரிச்சர்ட்ஸனை தொடர்ந்து நியூசிலாந்து வீரருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. 
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் அச்சுறுத்திவருகிறது. சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனாவின் வீச்சு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் நேற்று வரை 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால், மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டு, தென்னாப்பிரிக்க வீரர்கள் திருப்பியனுப்பப்படுகின்றனர். 

கொரோனாவின் அச்சுறுத்தல் தீவிரமாக உள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸனை தொடர்ந்து நியூசிலாந்து வீரர் லாக்கி ஃபெர்குசனுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு தொண்டை தொற்று ஏற்பட்டதால்,  அவர் மற்ற வீரர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. 

இந்நிலையில், நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஃபெர்குசனுக்கு தொண்டையில் வலி ஏற்பட்டதையடுத்து மற்ற வீரர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார் ஃபெர்குசன். மேலும் அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. 

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே நேற்று சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் யாரும் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. ரசிகர்களே இல்லாமல் அந்த போட்டி நடந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த போட்டியில் வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொள்ளக்கூட கிடையாது.

Also Read - முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்த சவுராஷ்டிரா

போட்டி முடிந்ததும் அவருக்கு தொண்டை தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு, அடுத்தடுத்து கொரோனா டெஸ்ட் செய்யப்படுவது, ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட் வீரர்களுக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

லாக்கி ஃபெர்குசன், ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் இடம்பெற்றுள்ளார். அந்த அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக திகழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!