வாஷிங்டன் சுந்தரின் போராட்ட அரைசதம் வீண்.. முதல் டி20யில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 27, 2023, 10:33 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 21  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ராஞ்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், டேரைல் மிட்செல், க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.

Womens U19 T20 World Cup: 100 ரன்னை கூட அடிக்க முடியாமல் அரையிறுதியில் தோற்ற ஆஸி.,! இங்கிலாந்து த்ரில் வெற்றி

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ஃபின் ஆலன் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 43 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 23 பந்தில் 35 ரன்கள் அடித்து ஃபின் ஆலன் ஆட்டமிழந்தார். ஃபின் ஆலனை  அவுட்டாக்கி முதல் பிரேக்கை கொடுத்தார் வாஷிங்டன் சுந்தர். ஃபின் ஆலனை வீழ்த்திய அதே 5வது ஓவரில் மார்க் சாப்மேனையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார் சுந்தர்.

ஆனால் நிலைத்து நின்று அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் டெவான் கான்வே அரைசதம் அடித்தார். 35 பந்தில் 52 ரன்கள் அடித்து கான்வே அர்ஷ்தீப் சிங்கின் பவுலிங்கில் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மைக்கேல் பிரேஸ்வெல்லும் ரன் அவுட்டானார். அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசிய டேரைல் மிட்செல் 26 பந்தில் அரைசதம் அடித்தார். 30 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 59 ரன்களை குவித்து நியூசிலாந்து அணிக்கு இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 176 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

177 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் டாப் 3 வீரர்களான இஷான் கிஷன் (4), ஷுப்மன் கில் (7), ராகுல் திரிபாதி (0) ஆகிய மூவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் அதிரடியாக ஆடி 34 பந்தில் 47 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்த சூர்யகுமார் யாதவும் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா(21), தீபக் ஹூடா(10) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ஆனால் ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி 25 பந்தில் 5 பவுண்டரிகள் மற்ரும் 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தரின் போராட்டம் அரைசதம், இந்திய அணியின் வெற்றிக்கு உதவவில்லை. 20 ஓவரில் 155 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது ஏன்..? இந்திய அணி தேர்வாளர் விளக்கம்

இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

click me!