வங்கதேச அணிக்கு எதிரான 28ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவின் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், தற்போது நடக்கும் 28ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். நெதர்லாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேஜா நிதமனுரு மற்றும் ரோலாஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஷாரிஸ் அகமது மற்றும் வெஸ்லி பாரேசி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று வங்கதேச அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நசும் அகமது மற்றும் ஹசன் மஹ்மூத் ஆகியோர் நீக்கப்பட்டு தஸ்கின் அகமது மற்றும் மஹெதி ஹசன் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் நெதர்லாந்து ஒரு போட்டியில் வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இதே போன்று வங்கதேச அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 8ஆவது இடத்தில் உள்ளது.
இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட வங்கதேச அணியால் அரையிறுதி வாப்பை பெற முடியாது. இன்னும் 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து வங்கதேச அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அமையும் என்று சொல்லலாம்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளேயிங் 11ல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு!
நெதர்லாந்து:
ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம்ஜித் சிங், பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், லோகன் வான் பீக், ஆர்யன் தத், வெஸ்லி பாரேசி, ஷாரிஸ் அகமது, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.
வங்கதேசம்:
ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (துணை கேப்டன்), லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் தமீம், முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா ரியாத், மெஹிடி ஹசன் மிராஸ், ஷாக் மஹெதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தஃபிஜூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம்.
இரு அணிகளும் உலகக் கோப்பையில் 2 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் தலா ஒரு போட்டிகளில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதே ஆண்டில் நடந்த மற்றொரு போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.