மாற்றங்களுடன் களமிறங்கும் நெதர்லாந்து - டாஸ் வென்று பேட்டிங்!

By Rsiva kumar  |  First Published Nov 3, 2023, 2:13 PM IST

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 34ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்டாட் எட்வர்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.


லக்னோவில் உலகக் கோப்பையின் 34ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில், நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்டாட் எட்வர்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். நெதர்லாந்து இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று ஆப்கானிஸ்தான் விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.

வேஷ்டி, சட்டை, கழுத்தில் ருத்ராக்‌ஷ மாலை – பய பக்தியுடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த பண்ட், அக்‌ஷர்!

Tap to resize

Latest Videos

இரு அணிகளும் 9 முறை ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 7 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் மட்டுமே நெதர்லாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியுள்ளது.

இதே போன்று, பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய வரலாற்று சாதனை படைத்தது. தற்போது ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதில், நெதர்லாந்து அணியைப் பொறுத்த வரையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான விக்ரம்ஜித் சிங் சொதப்பி வரும் நிலையில், அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, வெஸ்லி பாரேஸி அணியில் இடம் பெற்றுள்ளார்.

பிரச்சனையா? எனக்கா? ஷார்ட் பால் கேள்வியால் கோபமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

இதே போன்று ஆப்கானிஸ்தான் அணியில் நவீன் உல் ஹக் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நூர் அகமது அணியில் இடம் பெற்றுள்ளார்.

 

நெதர்லாந்து:

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், வெஸ்லி பாரேசி, சாகிப் சுல்பிகர், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரம், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாகிடி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபாரூக்கி, நூர் அகமது

India vs Sri Lanka: இளம் ரசிகருக்கு தனது ஷூவை பரிசாக அளித்த ரோகித் சர்மா – வைரலாகும் வீடியோ!

click me!