அவர ஓபனிங்லலாம் இறக்க வேண்டாம்.. ஆஷஸ் தொடரின் முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி.. முன்னாள் கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 25, 2019, 1:36 PM IST
Highlights

உலக கோப்பையை வென்ற உற்சாத்துடனும் உத்வேகத்துடனும் ஆஸ்திரேலியாவை ஆஷஸ் தொடரில் எதிர்கொள்ளலாம் என்று இருந்த இங்கிலாந்து அணிக்கு, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி படுமோசமாக அமைந்துள்ளது. 

கிரிக்கெட்டின் மிகவும் பாரம்பரியமான டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் கிரிக்கெட்டின் மிகவும் பழமையான பாரம்பரியமான மற்றும் முக்கியமான தொடர். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளால் உலக கோப்பைக்கு நிகராக மதிக்கப்படும் தொடர் ஆஷஸ். வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடருக்காக அந்த அணிகள் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

உலக கோப்பையை வென்ற உற்சாத்துடனும் உத்வேகத்துடனும் ஆஸ்திரேலியாவை ஆஷஸ் தொடரில் எதிர்கொள்ளலாம் என்று இருந்த இங்கிலாந்து அணிக்கு, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி படுமோசமாக அமைந்துள்ளது. அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 24 ஓவர்களில் வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இது இங்கிலாந்து அணிக்கு மனரீதியில் பலத்த அடியாக விழுந்துள்ளது. ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடும் நம்பிக்கையுடன் இருக்கிறது இங்கிலாந்து அணி. 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்த போட்டியில் களமிறங்க வேண்டிய வீரர்களை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்த அணியில் ஜேசன் ராயை அணியில் எடுத்துள்ளார் நாசர் ஹுசைன். ஆனால் அவரை தொடக்க வீரராக தேர்வு செய்யவில்லை; மிடில் ஆர்டர் வீரராக தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக டென்லி மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹுசைன். அதேபோல பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜோஃப்ரா ஆர்ச்சரை நாசர் ஹுசைன் தேர்வு செய்யவில்லை. 

நாசர் ஹுசைன் தேர்வு செய்துள்ள இங்கிலாந்து அணி:

ஜோ டென்லி, பர்ன்ஸ், ஜோ ரூட்(கேப்டன்), ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, ஸ்டூவர் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன். 
 

click me!