நீங்க சொல்றது தப்பு கங்குலி.. நேரடியாக பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Jul 25, 2019, 12:46 PM IST
Highlights

நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட அனுபவ வீரரான ரஹானேவிற்கு இம்முறையும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. மீண்டும் ரஹானே ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டார். அதேபோல 19 வயதே ஆன இளம் வீரராக இருந்தால்கூட சூழலுக்கு ஏற்றவாறு முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷுப்மன் கில்லும் கூட அணியில் இடம் கிடைக்கவில்லை. 
 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, உலக கோப்பையில் தோற்று வெளியேறியதற்கு காரணம், மிடில் ஆர்டர் சிக்கல் தான். 2 ஆண்டுகள் தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான மிடில் ஆர்டர் வீரர்களை தேர்வு செய்ய முடியவில்லை. அதன் எதிரொலியாக இந்திய அணி உலக கோப்பையில் தோற்று வெளியேறியது. 

உலக கோப்பை தோல்வியை அடுத்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலை கலைந்து வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் உள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20க்கான அணியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக மனீஷ் பாண்டே  மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

மனீஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே இந்தியா ஏ அணியிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடிவருகின்றனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த தொடரில் கூட இந்தியா ஏ அணியில் சிறப்பாக ஆடினர். அதனால் இவர்கள் இருவருக்கும் அணியில் இடம் கிடைத்தது. 

நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட அனுபவ வீரரான ரஹானேவிற்கு இம்முறையும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. மீண்டும் ரஹானே ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டார். அதேபோல 19 வயதே ஆன இளம் வீரராக இருந்தால்கூட சூழலுக்கு ஏற்றவாறு முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷுப்மன் கில்லும் கூட அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், ரஹானே மற்றும் கில் ஆகிய இருவரையும் ஒருநாள் அணியில் எடுக்காதது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்திய முன்னாள் கேப்டன் கங்குலி, மூன்று விதமான போட்டிகளுக்கும் முடிந்தவரை ஒரே வீரர்களை களமிறக்கும் விதமாக அணி தேர்வு செய்ய வேண்டும். அதற்கான நேரம் தேர்வுக்குழுவிற்கு வந்துவிட்டது. அப்படி செய்தால் தான் வீரர்களுக்கு தங்களின் ஆட்டம் மீதான நம்பிக்கையும் ரிதமும் கிடைக்கும். மிகக்குறைந்த வீரர்கள் தான் மூன்று விதமான போட்டிகளிலும் ஆடுகின்றனர். சிறந்த அணிகளின் தேர்வு அப்படித்தான் இருக்கும். அணி தேர்வு என்பது அணியின் நலனை கருத்தில் கொண்டு இருக்க வேண்டுமே தவிர அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக இருக்கக்கூடாது என்று கங்குலி வலியுறுத்தியிருந்தார். 

Time has come for indian selectors to pick same players in all formats of the game for rhythm and confidence.. too few are playing in all formats ..great teams had consistent players ..it’s not about making all happy but picking the best for the country and be consistent..

— Sourav Ganguly (@SGanguly99)

கங்குலியின் கருத்திலிருந்து முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி முரண்பட்டிருக்கிறார். கங்குலியின் கருத்துக்கு முரணான தனது கருத்தை வினோத் காம்ப்ளி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து விதமான போட்டிகளுக்கும் ஒரே வீரர்களை தேர்வு செய்வதை விட, அந்தந்த ஃபார்மட்டுக்கு ஏற்ற மற்றும் அதில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்களை தேர்வு செய்வதுதான் முக்கியம் என்று வினோத் காம்ப்ளி தெரிவித்துள்ளார். 

I believe in horses for courses.
We need to choose the best players for the format & play them.
It will help preserve players & with the big pool of players at our disposal, the mgmt can then utilize players for bigger series.
England & Australia are prime examples. https://t.co/wd9VKrBZmG

— VINOD KAMBLI (@vinodkambli349)
click me!