#ENGvsIND 4வது டெஸ்ட்டில் இந்திய அணி அவரை ஆடவைத்தே தீரணும்..! நாசர் ஹுசைன் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 31, 2021, 8:27 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய அணி சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை கண்டிப்பாக ஆடவைத்தே தீர வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 3 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் ஒரு போட்டி டிரா ஆனது. எனவே தொடர் 1-1 என சமனில் உள்ளது.

4வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது. அந்த போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்த்தே ஆக வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துவருகின்றன. முதல் 3 போட்டிகளில் அஷ்வினை சேர்க்காததே கடும் விமர்சனத்துக்குள்ளானது.

முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னராக ஆடிய ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் 4வது டெஸ்ட்டில் ஆட வாய்ப்பில்லை. எனவே அஷ்வின் கண்டிப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர் ஆடியே தீர வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாசர் ஹுசைன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது ரேங்கிங்கில் உள்ள தரமான ஆஃப் ஸ்பின்னரும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை விளாசியுள்ள நல்ல பேட்ஸ்மேனுமன ரவிச்சந்திரன் அஷ்வினை இந்திய அணி ஆடும் லெவனில் எடுப்பதில்லை. லீட்ஸில் நடந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் ஆடினர். இடது கை வீரர்களுக்கு எதிராக அபாரமாக பந்துவீசக்கூடிய அஷ்வின் கண்டிப்பாக ஆடியிருக்க வேண்டும்.

அஷ்வினை அணியில் எடுத்துவிட்டாலே இந்திய அணியின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். இஷாந்த் சர்மா திணறிவருகிறார். எனவே ஒரு ஃபாஸ்ட் பவுலரை நீக்கிவிட்டு அஷ்வினை சேர்க்க வேண்டும் என்று நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!