தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்த இதுதான் காரணம்..! அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 17, 2020, 8:57 PM IST
Highlights

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கான ரகசியத்தை பகிர்ந்துள்ள அந்த அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன், தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல்லில் ஆடுவார் என்பதையும் தெரிவித்துள்ளார். 
 

சிஎஸ்கே அணி ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி. ஐபிஎல்லில் இதுவரை நடந்துள்ள 12 சீசன்களில் 2 சீசன்களை தவிர மற்ற 10 சீசன்களில் சிஎஸ்கே அணி ஆடியுள்ளது. தோனி தான் அந்த அணியின் நிரந்தர கேப்டன். தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி, ஆடிய 10 சீசன்களிலுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றதுடன், 8 சீசன்களில் ஃபைனலுக்கு சென்று 3 முறை கோப்பையை வென்றுள்ளது. 

தோனியின் சிறப்பான கேப்டன்சி, கோர் டீம் வலுவாக இருப்பது ஆகிய இரண்டும்தான் அந்த அணி வெற்றிகரமாக திகழ காரணம். கேப்டன் தோனிக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் முழு சுதந்திரமளித்துள்ளது. எனவே வீரர்கள் தேர்வு, அணி காம்பினேஷன் குறித்த அனைத்து முடிவுகளையும் தோனியால் நினைத்த மாதிரி செயல்பட முடிகிறது. அதனால் அவர் நினைத்ததை செயல்படுத்த முடிவதால் தான் அவரால் அணிக்கு நல்ல முடிவை பெற்றுத்தர முடிகிறது. 

தோனி, கடந்த 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில், ஐபிஎல்லில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆடுவார் என்பது ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது. 

இந்நிலையில், ஆங்கில பத்திரிகைக்கு தோனி ஐபிஎல்லில் ஆடுவது குறித்து பேசிய அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன், தோனி எப்போது வரை ஆட வேண்டும் என நினைக்கிறாரோ அதுவரை சிஎஸ்கே அணியில் ஆடலாம். இப்போதைக்கு, முதலில் சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் டைட்டிலை ஜெயிக்கட்டும். தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக திகழ, அவர் போட்டியில் வெற்றி பெறுவதை தவிர எதைப்பற்றியுமே சிந்திக்கமாட்டார். அவரது நோக்கத்திலிருந்தும் பாதையிலிருந்தும் விலகமாட்டார். எனவே அதே கொள்கையைத்தான் பின்பற்றவுள்ளோம் என்றார் ஸ்ரீநிவாசன்.
 

click me!