ஐபிஎல் 16வது சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஜெயித்து வெற்றிப்பாதையில் பயணித்துவருகிறது.
ஆனால் இந்த சீசனை நன்றாக தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்து 3வது இடத்தில் உள்ளது. எனவே அந்த அணிக்கு வெற்றி முக்கியம். கடந்த போட்டியில் தோற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி முனைப்பில் இன்று மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.
மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியிலும் ஷிகர் தவான் ஆடாததால் சாம் கரன் தான் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டன்சி செய்கிறார்.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடுகிறார். அதனால் ரைலீ மெரிடித் நீக்கப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
அதர்வா டைட், பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டன், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் கரன்(கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான் ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்.