உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பயிற்சி எடுக்கும் ரோகித் சர்மா, 10 பந்தில் 1 ரன், 8 பந்தில் 2 ரன்!

By Rsiva kumar  |  First Published Apr 26, 2023, 12:28 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இப்போதிலிருந்து தனது டெஸ்ட் பயிற்சிக்கான ஆட்டத்தை தொடங்கிவிட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று அகமதாபாத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இஷான் கிஷானும் 13 ரன்களில் ரஷீத் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.

 

Tap to resize

Latest Videos

ரஷீத் கான் பந்தில் எப்படி விளையாட வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் பந்தில் தொடர்ந்து ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். இது ஒருபுறம் இருக்க மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தான் டுவிட்டரில் ரோகித் சர்மா விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். அதாவது, அதிரடியாக ஆட வேண்டிய டி20 போட்டிகளில் ரோகித் சர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்று ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். 

 

1 run in 10 balls
2 runs in 8 balls

Hence, Rohit Sharma is preparing for WTC final. pic.twitter.com/yQ4SDaF9os

— Virat Kohli Worldwide (@ViratianTweets)

click me!