மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 207 ரன்களை குவித்து, 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசனில் இன்றைய போட்டியில் மிகவும் வலுவான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், குமார் கார்த்திகேயா, ரைலீ மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணி ஓர் அலசல்..! சாரி ராகுல் உங்களுக்கு இடம் இல்ல..! உத்தேச ஆடும் லெவன்
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோஹித் சர்மா.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 ரன்களுக்கும், விஜய் சங்கர் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஷுப்மன் கில் 34 பந்தில் 56 ரன்கள் அடித்தார்.
IPL 2023: விராட் கோலிக்கு தடை..? பீதியில் ஆர்சிபி
அதன்பின்னர் டேவிட் மில்லர் மற்றும் அபினவ் மனோகர் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். மில்லர் 22 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்களையும், அபினவ் மனோகர் 21 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களையும் விளாசினர். ராகுல் டெவாட்டியா 5 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்களை விளாசி சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 207 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.