இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதன் அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது.
அயர்லாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அயர்லாந்து அணி:
பால் ஸ்டர்லிங், ஜேம்ஸ் மெக்கொலம், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), ஹாரி டெக்டார், கர்டிஸ் காம்ஃபெர், பீட்டர் மூர், லார்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஆண்டி மெக்பிரைன், கிரஹாம் ஹூம், மேத்யூ ஹம்ஃப்ரேஸ், பெஞ்சமின் ஒயிட்.
ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணி ஓர் அலசல்..! சாரி ராகுல் உங்களுக்கு இடம் இல்ல..! உத்தேச ஆடும் லெவன்
இலங்கை அணி:
நிஷான் மதுஷ்கா, திமுத் கருணரத்னே (கேப்டன்), குசல் மெண்டிஸ், ஆஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்செயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா (விக்கெட் கீப்பர்), ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரியா, அசிதா ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ.
முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் மூர் (5) மற்றும் ஜேம்ஸ்(10) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். ஹாரி டெக்டாரும் 18 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். ஆனால் 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் பால்பிர்னி சிறப்பாக பேட்டிங் ஆடி 95 ரன்களை குவித்த நிலையில், 5 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் பால் ஸ்டர்லிங்கும் டக்கரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். டக்கர் 80 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய ஸ்டர்லிங் சதமடித்தார். ஸ்டர்லிங் 103 ரன்களை குவிக்க, அதன்பின்னர் கர்டில்ஸ் காம்ஃபெரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். காம்ஃபெர் 111 ரன்களை குவித்தார். காம்ஃபெர்(111), ஸ்டர்லிங்(103), பால்பிர்னி(95) மற்றும் டக்கர்(80) ஆகிய நால்வரின் அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 492 ரன்களை குவித்தது.
IPL 2023: விராட் கோலிக்கு தடை..? பீதியில் ஆர்சிபி
டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது. தங்களது அதிகபட்ச ஸ்கோரை இலங்கைக்கு எதிராக அடித்து சாதனை படைத்தது அயர்லாந்து அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் அடித்துள்ளது.