வணக்கம் சென்னை.. சிங்கார சென்னையில் MI வீரர்கள்..! தமிழ் ரசிகர்களை கவர தமிழில் வீடியோ வெளியிட்டு வியூகம்

Published : Apr 01, 2021, 05:40 PM IST
வணக்கம் சென்னை.. சிங்கார சென்னையில் MI வீரர்கள்..! தமிழ் ரசிகர்களை கவர தமிழில் வீடியோ வெளியிட்டு வியூகம்

சுருக்கம்

சென்னை வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் தமிழில் பேசிய வீடியோவை எடிட் செய்து மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளது.  

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் போட்டி உட்பட 5 போட்டிகள் சென்னையில் தான் நடக்கின்றன. முதல் போட்டியில் ஆடுவதற்காக மும்பை இந்தியன்ஸ் வீரர்களான ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், பும்ரா, க்ருணல் பாண்டியா உள்ளிட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளதால் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெறும் வகையில், வீரர்களை தமிழில் பேசவைத்து வீடியோ வெளியிட்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

கேப்டன் ரோஹித் சர்மா, ”வணக்கம் சென்னை” என தொடங்க, ”எங்க MI ஃபேமிலி ஒவ்வொரு இந்தியருடைய ஃபேமிலி” என்று இஷான் கிஷனும், “உங்கள் அன்பும் பாசமும் தான் எங்களின் பலம்” என்று ரோஹித் சர்மா கூற, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!