#IPL2021 கிரேட் பிளேயர்; பிறவிலேயே லீடர்..! இளம் வீரருக்கு சங்கக்கரா புகழாரம்

By karthikeyan VFirst Published Apr 1, 2021, 5:13 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், சிறந்த வீரர் மற்றும் பிறவி லீடர் என்றும் அந்த அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநரும் முன்னாள் ஜாம்பவானுமான குமார் சங்கக்கரா புகழாரம் சூட்டியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன்பின்னர் ஒருமுறை கூட ஃபைனலுக்குக்கூட முன்னேறவில்லை.

இந்த சீசனில் புதிய கேப்டனின் தலைமையில் புது உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் களமிறங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்தே நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2013-2015 வரை ராஜஸ்தான் அணியில் ஆடிய சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணி 2 ஆண்டு தடை முடிந்து மீண்டும் 2018ல் ஐபிஎல்லுக்கு வந்ததும் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து தொடர்ந்து ஆடிவருகிறார். அந்த அணியின் செல்லப்பிள்ளையாகவே திகழ்கிறார் சஞ்சு சாம்சன்.

ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் குறித்து அந்த அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநரும், முன்னாள் ஜாம்பவானுமான குமார் சங்கக்கரா பேசியுள்ளார். 

சஞ்சு சாம்சன் குறித்து பேசிய சங்கக்கரா, சாம்சன் கிரேட் பிளேயர் மற்றும் பிறவி லீடர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குடும்பத்திலேயே வளர்ந்தவர். ராஜஸ்தான் அணியிலேயே வளர்ந்த சாம்சன் தலைமையிலேயே அணி ஆடவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சீசனில் நிறைய பொறுப்புகளை அவர் தோள்களில் சுமக்கப்போகிறார் என்பதால், இந்த சீசன் அவருக்கு கண்டிப்பாக எளிதாக இருக்காது. இளம் வீரரான சாம்சன், சிறந்த வீரர் மட்டுமல்லாது நல்ல கேப்டனும் கூட என்று சாம்சனை சங்கக்கரா புகழ்ந்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் டெவாட்டியா ஆகிய சிறந்த வீரர்கள் பலர் அணியில் இருக்கும் நிலையில், கிறிஸ் மோரிஸ், லிவிங்ஸ்டன், குல்தீப் யாதவ், ஷிவம் துபே, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஆகாஷ் சிங், சேத்தன் சகாரியா, கேசி காரியப்பா ஆகிய வீரர்களை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

click me!