இதெல்லாம் ஒரு காரணம்னு அதுக்காகலாம் கோலியை கேப்டன்சியில் இருந்து நீக்க முடியாது..!

By karthikeyan VFirst Published Apr 1, 2021, 3:29 PM IST
Highlights

ஐபிஎல் கோப்பையை ஜெயிக்கவில்லை என்பதற்காகவெல்லாம் கோலியை இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கமுடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் தேர்வாளருமான சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒரு வீரராகவும் ஒரு கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்து சாதனை படைத்துவருகிறார். இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார்.

Latest Videos

கேப்டன்சி பொறுப்பு கோலியின் பேட்டிங்கை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவரது கேப்டன்சியில் இந்திய அணி வெற்றிகளை பெற்றாலும், அவரது கேப்டன்சியை விட ரோஹித்தின் கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது என்பதாலும், நெருக்கடியான சூழல்களில் கோலியை விட ரோஹித் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் என்பதாலும், ஐபிஎல்லில் ரோஹித் 5 முறை கோப்பையை வென்ற அதேவேளையில், கோலி ஒருமுறை கூட வெல்லாததையும் சுட்டிக்காட்டி, வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டன்சி பொறுப்பை ரோஹித்திடம் கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் உள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் அணி தேர்வாளருமான சரண்தீப் சிங், கோலி பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை என்றால் தான், அவரது அழுத்தத்தை குறைக்கும் விதமாக கேப்டன்சி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் கோலி 3 விதமான போட்டிகளிலும் 50க்கும் அதிகமான சராசரியை வைத்துள்ளார்.  அவர் ஏதாவது ஒரு ஃபார்மட்டிலாவது சொதப்பினார் என்றால், கேப்டன்சி பகிர்வை பற்றி யோசிக்கலாம்.

ஆனால் அவர் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வெல்லவில்லை என்ற காரணத்திற்காகவெல்லாம் கேப்டன்சியை மாற்றக்கூடாது. ஃபிட்டான வீரர் மற்றும் கேப்டன் விராட் கோலி. கோலி இல்லாத நேரத்தில் ரோஹித் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். ஆனால் அதற்காகவெல்லாம் கோலியை நீக்கிவிட்டு, ரோஹித்தை கேப்டனாக்கலாம் என்று சொல்லமுடியாது என்று சரண்தீப் சிங் கூறியுள்ளார்.
 

click me!