எங்க காலத்துல யோ யோ டெஸ்ட் இருந்திருந்தால் சச்சின், கங்குலிலாம் தேறியிருக்கவே மாட்டாங்க..! சேவாக் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Apr 1, 2021, 2:41 PM IST
Highlights

தங்கள் காலத்தில் யோ யோ டெஸ்ட் இருந்திருந்தால் சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண் ஆகிய வீரர்கள் தேறியிருக்கவே மாட்டார்கள் என்று சேவாக் மிகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அதிகமாக பந்துவீசவில்லை. 3வது போட்டியில் வீசினார். ஆனால் 2வது போட்டியில் குல்தீப், க்ருணல் பாண்டியாவின் ஸ்பின்னை பென் ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் அடித்து நொறுக்கிய நிலையில், பந்துவீச வேண்டிய அவசியமிருந்தும், ஹர்திக் பாண்டியா வீசவில்லை. அவரது வேலைப்பளுவை குறைக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா பந்துவீசவைக்கப்படவில்லை என்றும், தேவைப்படும்போது வீசுவார் என்றும் கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பந்துவீசுமளவிற்கு ஃபிட்னெஸ் இல்லை எனும்போதும் ஹர்திக் பாண்டியா மட்டும் அணியில் எடுக்கப்படுகிறார். ஆனால் ஃபிட்னெஸ் இல்லை என்பதற்காக வருண் சக்கரவர்த்தி மட்டும் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டது ஏன் என சேவாக்கிடம் ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சேவாக், ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னெஸில் எந்த பிரச்னையும் இல்லை. இங்கு யோ யோ டெஸ்ட் தான் விஷயம். ஹர்திக் பாண்டியா நன்றாக ஓடக்கூடியவர். யோ யோ டெஸ்ட் அவருக்கு ஒரு விஷயமே இல்லை. பாண்டியாவின் வேலைப்பளுவை குறைப்பதற்காக அணி நிர்வாகம் அவரை பந்துவீச வைக்கவில்லை. ஆனால் வருண் சக்கரவர்த்தி யோ யோ டெஸ்ட்டிலேயே தேறவில்லை. எனவே தான் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. ஆனால் இதையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஏனெனில் எங்கள் காலத்தில் யோ யோ டெஸ்ட் இருந்திருந்தால், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லக்‌ஷ்மண் ஆகியோர் அந்த டெஸ்ட்டில் தேறியிருக்கவே மாட்டார்கள். 

திறமை தான் முக்கியம்; ஃபிட்டான டீமை வைத்துக்கொண்டு திறமையில்லை என்றால் அது தோல்வியில் தான் முடியும். திறமையின் அடிப்படையில் வாய்ப்பளித்துவிட்டு, பின்னர் அவர்களின் ஃபிட்னெஸை மேம்படுத்த வேண்டும். ஒரு பவுலரால் 10 ஓவர் வீசிவிட்டு, 50 ஓவரும் ஃபீல்டிங் செய்ய முடிந்தால், அதுவே போதும். அவரை அணியில் எடுக்கலாம் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!