மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக எஞ்சிய ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பெறுவதற்கு ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான கதவு வரையில் சென்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் உறுதி செய்யப்படும்.
3ஆவது இடத்திற்கான போட்டியில் மும்பை - பெங்களூரு பலப்பரீட்சை; யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?
இதுவரையில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. இன்றும் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 53ஆவது போட்டி நடக்கிறது. இதில், வெற்றி பெறும் அணி மும்பையாகவோ அல்லது பெங்களூருவாகவோ இருந்தாலும் சரி அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு செல்லும். 2ஆவது இடத்தில் சிஎஸ்கே அணி 13 புள்ளிகளுடன் கம்பீரமாக உள்ளது.
யாருக்கெல்லாம் பிளே ஆஃப் வாய்ப்பு? யாரெல்லாம் அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்?
மூன்றாவது இடத்தில் 11 புள்ளிகளுடன் லக்னோ அணி உள்ள நிலையில், இன்று நடக்கும் போட்டியில் மும்பை ஜெயித்தால் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3ஆவது இடம் பிடிக்கும். இதுவே பெங்களூரு ஜெயித்தால் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடிக்கும். அதன் பிறகு லக்னோ அணி 4ஆவது இடத்திற்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5ஆவது இடத்திற்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6ஆவது இடத்திற்கும் செல்லும்.
ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லாதது தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான் தேவனை!
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் ஜோர்டான் ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் கிறிஸ் ஜோர்டான் ஆர்சிபி அணிக்கு எதிராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி பந்தில் த்ரில் வெற்றி: 2ஆவது முறையாக அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த ரிங்கு சிங்!
உண்மையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் குறித்து அணி நிர்வாகம் எந்த தகவலும் அளிக்காத நிலையில் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். ரூ.8 கோடிக்கு மும்பை அணியில் இடம் பெற்ற ஆர்ச்சர் இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். 20 ஓவர்கள் வீசிய அவர் 190 ரன்கள் வாரி வழங்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான கிறிஸ் ஜோர்டான், 28 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.