ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லாதது தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான் தேவனை!

By Rsiva kumar  |  First Published May 9, 2023, 1:38 PM IST

பஞ்சாப் அணியில் ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.
 


நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் 53ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் ஆடியது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குர்பாஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்தார். வெங்கடேஷ் ஐயர் 11 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு புறம் கேப்டன் தனது பொறுப்பை உணர்ந்து அணிக்கு 51 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். அப்போது கேகேஆர் அணி 15.1 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்திருந்தது. கேகேஆர் வெற்றிக்கு 29 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட போது ஆண்ட்ரே ரஸல் உடன் ரிங்கு சிங் இணைந்தார்.

3ஆவது இடத்திற்கான போட்டியில் மும்பை - பெங்களூரு பலப்பரீட்சை; யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

Latest Videos

இருவரும் பவுண்டரியும், சிக்ஸருமாக விரட்ட கடைசி 6 பந்தில் கேகேஆர் வெற்றிக்கு வெறும் 6 ரன்களே தேவைப்பட்டது. கடைசி ஒவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் 3 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுத்த ரஸல் 5ஆவது பந்தில் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங் புல்டாஸ் பந்தை சரியான முறையில் பவுண்டரிக்கு திருப்பி விட்டார். இதன் மூலமாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 2ஆவது முறையாக அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார் ரிங்கு சிங். இதற்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்துக் கொடுத்து அணிக்கு தேடிக் கொடுத்தார்.

யாருக்கெல்லாம் பிளே ஆஃப் வாய்ப்பு? யாரெல்லாம் அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்?

அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு வழியாக இந்த வெற்றியின் மூலமாக 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் 11 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

கடைசி பந்தில் த்ரில் வெற்றி: 2ஆவது முறையாக அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த ரிங்கு சிங்!

இந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறியிருப்பதாவது: இந்த பிட்சில் பேட்டிங் ஆடுவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. 179 ரன்கள் எடுத்த எங்களால் வெற்றி பெற முடியவில்லை. கொல்கத்தா வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். கடைசி வரை போட்டி சென்றதற்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம். எங்களது அணியில் ஆஃப் ஸ்பின்னர்கள் என்று யாரும் இல்லை. ஆதலால் இடது கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் ஆடி அதிக ரன்கள் எடுத்துவிடுகிறார்கள். அவர்களது விக்கெட்டை கைப்பற்ற நாங்கள் திணறி வருகிறோம். இந்த பிட்சில் பந்து நன்றாக திரும்பியது. அங்கு தான் எங்களது பேட்டிங்கும் பிரச்சனையாகி அமைந்துவிட்டது. இதனால் குறைவான ரன்கள் எடுத்து தோற்றுவிட்டோம் என்று கூறியுள்ளார்.

click me!