IPL 2023: உங்க டைம் முடிந்தது பொல்லார்டு.. நீங்க கிளம்பலாம்! 12 வீரர்களை கொத்தா கழட்டிவிடும் மும்பை இந்தியன்ஸ்

Published : Nov 07, 2022, 08:08 PM ISTUpdated : Nov 07, 2022, 08:10 PM IST
IPL 2023: உங்க டைம் முடிந்தது பொல்லார்டு.. நீங்க கிளம்பலாம்! 12 வீரர்களை கொத்தா கழட்டிவிடும் மும்பை இந்தியன்ஸ்

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன்பாக கைரன் பொல்லார்டு உட்பட 12 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல்லில் அதிகமுறை கோப்பையை வென்ற அணி மட்டுமல்லாது, அதிகளவிலான ரசிகர்களை பெற்ற அணியும் மும்பை இந்தியன்ஸ் தான்.

ரோஹித் சர்மா தலைமையில் முதல் முறையாக 2013ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அதன்பின்னர் 2015, 2017, 2019, 2020 ஆகிய சீசன்களிலும் கோப்பையை வென்றது. ஐபிஎல்லில்  அதிகமுறை(5) கோப்பையை வென்ற சாதனைக்கு சொந்தக்கார அணியான மும்பை இந்தியன்ஸ், கடந்த சீசனில் பிளே ஆஃபிற்குக்கூட முன்னேறவில்லை. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 10ம் இடத்தில் இருந்தது.

T20 World Cup: இவர் சரிப்பட்டு வரமாட்டார்.. அரையிறுதியில் அவரை ஆடவைங்க! இந்திய அணிக்கு கபில் தேவ் அட்வைஸ்

கடந்த சீசனில் படுமோசமாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த சீசனில் வலுவான கம்பேக் கொடுக்கும் முனைப்பில் உள்ளது. கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக  நடக்கவுள்ளது. ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் விடுவிக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கோர் வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு அணியை மறுகட்டமைப்பு செய்யவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை அந்த அணியின் கோர் வீரர்களில் ஒருவராகவும், நீண்டகாலமாக தங்கள் அணியின் மேட்ச் வின்னராக இருந்தவருமான கைரன் பொல்லார்டை கனத்த இதயத்துடன் கழட்டிவிடவுள்ளதாக தெரிகிறது. 

கைரன் பொல்லார்டு மட்டுமல்லாது டைமல் மில்ஸ், ஃபேபியன் ஆலன், ஆகிய வெளிநாட்டு வீரர்களையும் விடுவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஜஸ்ப்ரித் பும்ரா, டிம் டேவிட் ஆகிய வீரர்களை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி உறுதியாக தக்கவைக்கவுள்ளது. 

T20 World Cup: அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்! உத்தேச ஆடும் லெவன்

மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்:

1. கைரன் பொல்லார்டு
2. டைமல் மில்ஸ்
3. ஃபேபியன் ஆலன்
4. ஆகாஷ் மத்வால்
5. அன்மோல்ப்ரீத் சிங்
6. முருகன் அஷ்வின்
7. மயன்க் மார்கண்டே
8. சஞ்சய் யாதவ்
9. ராமன் தீப் சிங்
10. ஆர்யன் ஜுயால்
11. ராகுல் புத்தி
12. முகமது அர்ஷாத் கான்

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கைரன் பொல்லார்டு, சூர்யகுமார் யாதவ், பும்ரா, இஷான் கிஷன், ராமன் தீப் சிங், ராகுல் புத்தி, ரித்திக் ஷோகீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஆரியன் ஜுயால், ஃபேபியன் ஆலன், டிவால்ட் பிரெவிஸ், பாசில் தம்பி, முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனாத்கத், மயன்க் மார்கண்டே, திலக் வர்மா, சஞ்சய் யாதவ், ரைலீ மெரிடித், முகமது அர்ஷாத் கான், அன்மோல்ப்ரீத் சிங்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!
பும்ராவையே ஓரம் கட்டிய 'மிஸ்டரி ஸ்பின்னர்'.. T20 தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி புதிய சரித்திரம்