
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நிதானமாக செயல்பட்டு தரமான வீரர்களை எடுத்துவருகிறது.
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய வீரர்களுடன் வலுவான கோர் அணியை கொண்ட மும்பை இந்தியன்ஸ், ஏலத்திற்கு முன் தக்கவைக்கமுடியாமல் விடுவித்த இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவருக்காக பல அணிகள் போட்டி போட்ட நிலையில், அவரை எடுத்தே தீர வேண்டும் என்ற உறுதியில் இருந்த மும்பை அணி ரூ.15.25 கோடிக்கு எடுத்தது.
அவருக்கு அடுத்து 2வது வீரராக தென்னாப்பிரிக்காவின் அண்டர் 19 வீரரான பேபி ஏபி என்றழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸை ரூ.3 கோடிக்கு எடுத்தது. ஏபி டிவில்லியர்ஸின் மிகப்பெரிய ரசிகரான அந்த இளம் வீரர், அவரைப்போலவே மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். அண்டர் 19 உலக கோப்பையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த, “பேபி ஏபி” என்றழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஓபனிங்கில் ரோஹித் - இஷான் கிஷன், 3ம் வரிசையில் சூர்யகுமார் இறங்குவார்கள் என்பதால் 4ம் வரிசையில் பேபி ஏபி இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம். 6ம் வரிசையில் பொல்லார்டு இறங்குவார். 5ம் வரிசை வீரர் இனிமேல் எடுக்கப்படுவார்.