IPL 2023: MI vs RCB முக்கியமான போட்டி..! MI-யில் ஆர்ச்சர் இடத்தில் இங்கி., ஆல்ரவுண்டர்! உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published May 9, 2023, 2:43 PM IST

மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி இடையேயான முக்கியமான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக அமர்ந்துள்ளது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும்.

சிஎஸ்கே அணி 13 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியும் இனிமேல் விடாது. எனவே எஞ்சிய 2 இடங்களுக்கான போட்டி மிகக்கடுமையாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால் இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே முக்கியமானது.

Latest Videos

ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக இஷான் கிஷன் அறிவிப்பு

தலா 10 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் எஞ்சிய சீசனிலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான கிறிஸ் ஜோர்டான் ஆடுவார்.  கடந்த போட்டியில் ஆடாத திலக் வர்மா இந்த போட்டியில் ஆடுவார். எனவே டிரிஸ்டான் ஸ்டப்ஸ் நீக்கப்படுவார். 

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, அர்ஷத் கான்.

IPL 2023:RRக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல! கடின இலக்கை வெறித்தனமா விரட்டி கடைசி பந்தில் SRH த்ரில் வெற்றி

உத்தேச ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், க்ளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
 

click me!