ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணிகளுக்கு புது சிக்கல்..!

By karthikeyan VFirst Published Aug 27, 2020, 10:06 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஐபிஎல்லுக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்காக முன்கூட்டியே அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் ஆகிய 2 அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளும் துபாய்க்கு சென்றன. இந்த 2 அணிகள் மட்டும் அபுதாபிக்கு சென்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு வாரம் தனிமைப்படுதலை முடித்து, பயிற்சியை தொடங்கிவிட்டது. 

துபாயில் 7 நாட்கள் மட்டுமே தனிமைப்படும் காலம். ஆனால் அபுதாபியில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது உள்ளூர் விதி. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் ரூம்கள் லாக் செய்யப்பட்டுள்ளன. 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மற்ற அணிகள் எல்லாம் 7 நாட்கள் மட்டுமே தனிமையில் இருந்துவிட்டு பயிற்சியை தொடங்கிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மட்டும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது அந்த அணிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

7 நாட்கள் மட்டுமே தனிமையில் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில், அபுதாபி நெறிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அந்த 2 அணிகளும் அதிருப்தியில் உள்ளன.  இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று அந்த அணிகளின் சார்பில் கோரப்பட்டுள்ளது.
 

click me!