
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இன்றைய போட்டியில், புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ஆடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி ஆடிய 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
எனவே 2 அணிகளுக்குமே வெற்றி முக்கியம் என்ற நிலையில், இரு அணிகளும் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் தீவிர முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடுகிறது. சிஎஸ்கே அணியும் வெற்றிக்காக போராடும் என்பதால் ஆட்டம் கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும்.
இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும்.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனாத்கத், முருகன் அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, டைமல் மில்ஸ்.
சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக ட்வைன் ப்ரிட்டோரியஸ் சேர்க்கப்படலாம்.
உத்தேச சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, தோனி, ரவீந்திர ஜடேஜா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்ஷனா, முகேஷ் சௌத்ரி.