#PSL லாகூர் அணியை பொட்டளம் கட்டிய ஷாநவாஸ் தானி..! 80 ரன் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jun 19, 2021, 3:16 PM IST
Highlights

லாகூர் அணியை 80 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் காலண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லாகூர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் மசூத் டக் அவுட்டானார். கேப்டனும் தொடக்க வீரருமான முகமது ரிஸ்வான் 15 ரன்னில் ஆட்டமிழக்க, மக்சூத் அருமையாக ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் 60 ரன்கள் அடித்தார். ரூசோ 24 பந்தில் 29 ரன்கள் அடித்தார்.

சொஹைல் தன்வீர் வெறும் 9 பந்தில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் சுல்தான்ஸ் அணி 169 ரன்கள் அடித்தது.

170 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லாகூர் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக சுல்தான்ஸ் அணியின் பவுலர்களாக ஷாநவாஸ் தானி மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அவர்களிடம் மட்டுமே 7 விக்கெட்டுகளை இழந்தனர்.

அபாரமாக பந்துவீசிய ஷாநவாஸ் தானி வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தானி மற்றும் இம்ரான் கானின் அபாரமான பவுலிங்கால், லாகூர் அணி 15.1 ஓவரில் வெறும் 89 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது முல்தான் சுல்தான்ஸ் அணி. ஆட்டநாயகனாக ஷாநவாஸ் தானி தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!