IPL 2023: தளபதி பாடலுக்கு கிடார் வாசித்த தல தோனி..! சிஎஸ்கே கேம்ப்பில் செம கச்சேரி.. வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Mar 16, 2023, 3:12 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனுக்காக தயாராகிவரும் சிஎஸ்கே அணி கேம்ப்பில் கேப்டன் தோனி கிடார் வாசிக்க, மற்ற வீரர்கள் டான்ஸ் ஆடி மகிழ்ந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 16வது சீசன் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது. இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், அதற்கடுத்தபடியாக அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்ற, அதிகமுறை ஃபைனலுக்கு முன்னேறிய, 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய அணி என ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே அணியை வைத்திருப்பவர் தோனி. 

சச்சின் பயங்கரமான மூளைக்காரர்.. அவரை ஸ்லெட்ஜிங் செய்தது எனக்கே எதிராக திரும்பியது.! சக்லைன் முஷ்டாக் வருத்தம்

ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடர் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாளை(மார்ச் 4) முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் தொடங்குகிறது. மார்ச் 31 முதல் ஐபிஎல் தொடங்குகிறது.  31ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதுவே தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால் இந்த சீசனில் 5வது முறையாக கோப்பையை வென்று, கோப்பையுடன் ஓய்வுபெறும் முனைப்பில் தோனி உள்ளார். சிஎஸ்கே அணி நிர்வாகமும் அதே ஆசையில் உள்ளது.

இந்நிலையில், அதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, தீபக் சாஹர், ராயுடு உள்ளிட்ட வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்துவருகின்றனர். ஐபிஎல்லுக்கு முன்பாக அணிகளின் கேம்ப்பில் அந்த அணி வீரர்களை வைத்து புரமோ வீடியோ வெளீயிடப்படுவது வழக்கம்.

மும்பையில் சிறுவர்களுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடிய வார்னர்..! வைரல் வீடியோ

அந்த புரமோக்களிலும் சிஎஸ்கே அணியின் வீடியோக்கள் தான் செம வைரலாகும். அந்தவகையில், விஜயின் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு தல தோனி கிடார் வாசிக்க, தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோர் ஜாலியாக டான்ஸ் ஆட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

Groovy Wednesday! 🥳 🦁💛 pic.twitter.com/fLpSthiMrw

— Chennai Super Kings (@ChennaiIPL)
click me!