No Look Six:சொட்ட சொட்ட வியர்வை சிந்தி பயிற்சி செய்யும் தோனி: சிக்சர் விளாசியும் பந்தை பார்க்காத வீடியோ வைரல்!

By Rsiva kumar  |  First Published Mar 15, 2023, 10:02 AM IST

வரும் 31 ஆம் தேதி 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிரமாக வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 


கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 16அவது சீசன் வரும் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்று மொத்தம் 10 அணிகள் பங்கு பெறுகின்றன. வரும் 31 ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

மகிழ்ச்சியின் உச்சகட்டம், நார்வே நாட்டு டான்ஸ் குழுவோடு சேர்ந்து டான்ஸ் ஆடிய விராட் கோலி!

Tap to resize

Latest Videos

இதன் காரணமாக அந்தந்த அணிகள், அணிகளின் ஹோம் மைதானங்களில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் (சேப்பாக்கம் மைதானம்) ஸ்டேடியத்தில் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியின் வீடியோ ஒன்றை பகிரப்பட்டுள்ளது. அதில், தோனி சொட்ட சொட்ட வியர்வை சிந்தயபடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி சிக்சர் விளாசியும் பந்தை பார்க்கவில்லை. இறங்கி வந்து பந்தை சிக்சருக்கு விரட்டுவதோடு சரி, அதன் பிறகு பந்து எங்கு போகுது என்றெல்லாம் அவர் பார்க்கவில்லை.

ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் அடிக்கிறேன்; மனசாட்சி சொல்லியிருச்சு - ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்!

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனுக்கு ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவி வந்த நிலையில், கேப்டன் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது. துர்திர்ஷ்டவசமாக அந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில், சீசனிலிருந்து வெளியேறியது. 

கடந்த 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். அவரை சென்னை அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இதே போன்று அஜின்க்ய ரகானேவும் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார்.

களைகட்டத் தொடங்கிய ஐபிஎல் டிக்கெட் விற்பனை - எங்கு, எப்படி வாங்கலாம்? டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

 

 

click me!