WPL 2023:ஆரம்பத்தில் பதுங்கி, பின் பாய்ந்த ஹர்மன்ப்ரீத் கௌர்! குஜராத்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது மும்பை

Published : Mar 14, 2023, 09:22 PM IST
WPL 2023:ஆரம்பத்தில் பதுங்கி, பின் பாய்ந்த ஹர்மன்ப்ரீத் கௌர்! குஜராத்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது மும்பை

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக்கில் ஹர்மன்ப்ரீத் கௌரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 162 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 163 ரன்கள் என்ற சவாலான இலக்கை குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று குஜராத் ஜெயிண்ட்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது. 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, 2வது வெற்றியை எதிர்நோக்கி இந்த போட்டியில் ஆடிவருகிறது.

மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ICC WTC ஃபைனலில் தயவுசெய்து அந்த பையனை ஆடவைக்காதீங்க.. இவரே போதும்..! கவாஸ்கர் அதிரடி

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சபினேனி மேகனா, சோஃபியா டன்க்லி, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், தயாளன் ஹேமலதா, அன்னாபெல் சதர்லேண்ட், சுஷ்மா வெர்மா, கிம் கார்த், டனுஜா கன்வார், ஸ்னே ராணா (கேப்டன்), மன்சி ஜோஷி.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தாரா குஜார், அமெலியா கெர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிதா, சாய்கா  இஷாக்.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஹைலி மேத்யூஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனையான யஸ்டிகா பாட்டியாவும் நாட் ஸ்கிவர் பிரண்ட்டும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி 74 ரன்கள் அடித்தனர். ஸ்கிவர் பிரண்ட் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 44 ரன்கள் அடித்த யஸ்டிகா பாட்டியா ரன் அவுட்டாகி அரைசதத்தை தவறவிட்டார்.

நான் 40 ரன் அடிச்சப்பவே கண்டிப்பா 150 அடிப்பேன்னு தெரியும்..! ராகுல் டிராவிட்டிடம் மனம் திறந்த விராட் கோலி

களத்திற்கு வந்ததும் அமைதி காத்து நிதானமாக ஆடிய ஹர்மன்ப்ரீத் கௌர், களத்தில் செட்டில் ஆனபின் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அரைசதம் அடித்தார். 30 பந்தில் 51 ரன்கள் அடித்து ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 162 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 163 ரன்கள் என்ற சவாலான இலக்கை குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி