தோனி பிறந்தநாள்.. 41வது பிறந்தநாளை ஒட்டி 41 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்..! தல ரசிகர்களின் தரமான சம்பவம்

Published : Jul 07, 2022, 09:40 AM ISTUpdated : Jul 07, 2022, 09:41 AM IST
தோனி பிறந்தநாள்.. 41வது பிறந்தநாளை ஒட்டி 41 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்..! தல ரசிகர்களின் தரமான சம்பவம்

சுருக்கம்

தோனியின் 41வது பிறந்தநாளை ஒட்டி விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் 41 அடி கட் அவுட்டை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

தோனியின் 41வது பிறந்தநாள் இன்று. 2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, 2019ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடி 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் ஆடி 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்தவர் தோனி. இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு செய்து கிரிக்கெட் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக திகழ்பவர் தோனி.

கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தோனி. சினிமா நடிகர்களைவிட ஒரு படி அதிகமாக கொண்டாடப்படுபவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் மட்டும் ஆடிவருகிறார்.

தோனியின் 41வது பிறந்தநாள் இன்று. தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மனைவி மற்றும் மகளுடன் தோனி லண்டனுக்கு சென்றுள்ளார். தோனி அவரது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினாலும், அவரது ரசிகர்கள் இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடிவருகின்றனர்.

தோனியின் 41வது பிறந்தநாளையொட்டி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள், 41 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து கொண்டாடுகின்றனர். 2011 உலககோப்பையில் தோனி அடித்த ஃபேமஸான வின்னிங் ஷாட் ஸ்டில்லை கட் அவுட்டாக வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

இந்தியாவில் சினிமா பிரபலங்களுக்கு கட் அவுட் வைப்பது வழக்கம். ஆனால் சினிமா பிரபலங்களின் கட் அவுட்டை விட உயரமான, தரமான கட் அவுட்டை செய்து தரமான சம்பவம் செய்துள்ளனர் தோனி ரசிகர்கள்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எல்லை மீறிய ரசிகர்.. பொறுமை இழந்த பும்ரா.. கடும் கோபத்தில் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்!
4வது டி20 ரத்து: மேட்ச் தான் நடக்கலயே.. டிக்கெட் பணத்தை திருப்பி கொங்க.. ரசிகர்கள் ஆதங்கம்