TNPL 2022: அருண் கார்த்திக்கின் அபார சதம் வீண்.. மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி

By karthikeyan VFirst Published Jul 5, 2022, 11:05 PM IST
Highlights

அருண் கார்த்திக் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தும், மதுரை பாந்தர்ஸ் அணியால் 210 ரன்கள் என்ற கடின இலக்கை அடிக்க முடியாததால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

தமிழ்நாடு சூப்பர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி:

ஸ்ரீ நிரஞ்சன், பிரதோஷ் பால், பாபா அபரஜித், சஞ்சய் யாதவ், பாபா இந்திரஜித் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜி அஜிதேஷ், ஜிதேந்திர குமார், ஷாஜகான், என்.எஸ்.ஹரிஷ், அதிசயராஜ் டேவிட்சன், ஈஸ்வரன்.

மதுரை பாந்தர்ஸ் அணி:

வி ஆதித்யா, அருண் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பால்சந்தர் அனிருத், என்.எஸ்.சதுர்வேத் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், தலைவன் சற்குணம், சன்னி சந்து, வருண் சக்கரவர்த்தி, கிரண் ஆகாஷ், சிலம்பரசன், ஆர் மிதுன்.

இதையும் படிங்க - இது தோல்வியை விட கொடுமையானது..! சின்ன தவறால் ICC WTC புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை விட கீழிறங்கிய இந்தியா

முதலில் பேட்டிங் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் நிரஞ்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி 27 பந்தில் 47 ரன்களை விளாசினார். பாபா அபரஜித் 27 பந்தில் 34 ரன்கள் அடித்தார். 4ம் வரிசையில் இறங்கிய சஞ்சய் யாதவ் நிதானமாக தொடங்கினார். ஆனால் களத்தில் சற்று நிலைத்தபின்னர், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார்.

அவருடன் இணைந்து கேப்டன் பாபா அபரஜித்தும் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சஞ்சய் யாதவ் 42 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்தார். இந்திரஜித் 18 பந்தில் 34 ரன்களை விளாச, 20 ஓவரில் 209 ரன்களை குவித்தது நெல்லை ராயல் கிங்ஸ் அணி.

210 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய மதுரை பாந்தர்ஸ் அணியில் அருண் கார்த்திக்கை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனுமே சரியாக ஆடவில்லை. அருண் கார்த்திக் தனி ஒருவனாக நிலைத்து நின்று அடித்து ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.

இதையும் படிங்க - ENG vs IND: பும்ரா செய்த முட்டாள்தனம் தான் இந்தியாவின் பின்னடைவுக்கு காரணம்..! கெவின் பீட்டர்சன் கடும் விளாசல்

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனி ஒருவனாக நெல்லை பவுலிங்கை அடித்து ஆடிய அருண் கார்த்திக் 53  பந்தில் சதமடித்தார். 57 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 106 ரன்களை குவித்தார் அருண் கார்த்திக். ஆனாலும் மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால் 20 ஓவரில் 183 ரன்கள் அடித்து தோல்வியடைந்தது மதுரை பாந்தர்ஸ் அணி.

நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று நெல்லை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 

click me!