
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக களமிறங்குவதால் 10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த சீசனில் ஐபிஎல் லீக் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நடத்தப்படவுள்ளது. மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் மட்டும்தான் ஐபிஎல் லீக் போட்டிகள் நடக்கவுள்ளன.
இதையும் படிங்க - IPL 2022: பயிற்சியில் ஸ்டம்ப்பை உடைத்தெறிந்த நடராஜன்..! வீடியோ
மும்பையில் வான்கடே ஸ்டேடியம், ப்ராபோர்ன் ஸ்டேடியம், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஸியேஷன் ஸ்டேடியம் ஆகிய 5 மைதானங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன.
ஐபிஎல் தொடரின் ஆரம்பக்கட்டத்தில் 25 சதவிகித பார்வையாளர்களையும், போகப்போக கூடுதல் பார்வையாளர்களையும் அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை நேரில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.