19 போட்டிகளில் 51 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்த முகமது சிராஜ்!

By Rsiva kumarFirst Published Jun 8, 2023, 7:28 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். மேலும், இந்தப் போட்டியில் அஸ்வின் இடம் பெறாதது குறித்து விமர்சித்தனர்.

அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட இந்தியா: ஆஸ்திரேலியா 469க்கு ஆல் அவுட்!

எனினும், இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 327 ரன்கள் குவித்து 3 விக்கெட் எடுத்தது. பின்னர், 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில், 25 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கும். இதே போன்று ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 31 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும், இந்தியாவிற்கு எதிராக 2000 ரன்களை கடந்தார். அவர், 121 பந்துகளில் ஆட்டமிழந்தார்.

ஷர்துல் தாக்கூரை எடுத்ததற்கு அவரால் முடிந்ததை செய்துவிட்டார் - 4 நோபால், 75 ரன்!

இதையடுத்து வந்த அலெக்ஸ் கேரி 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்தது. இதில், 38 ரன்கள் எக்ஸ்ட்ராஸ் மூலமாக பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிக்கி பாண்டிங் சதம் சாதனையை முறியடித்து, இந்தியாவிற்கு எதிராக 2000 ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித்!

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 போட்டிகளில் 51 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயான் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தினார். நேற்று 3 விக்கெட்டிற்கு 327 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா இன்று 142 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் நாளில் முதல் விக்கெட்டை எடுத்து சிராஜ் தான். 2ஆவது நாளிலும் அவர் தான் முதல் விக்கெட்டை எடுத்துள்ளார்.

விராட் கோலியின் வழிகாட்டுதல் எனக்கு உதவியாக இருந்தது – ரோகித் சர்மா!

கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிராக 18 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

click me!