இந்தியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. ரோகித் சர்மா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்யவே, ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. இதில், நேற்றைய முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் களத்தில் இருந்தனர்.
விராட் கோலியின் வழிகாட்டுதல் எனக்கு உதவியாக இருந்தது – ரோகித் சர்மா!
இதையடுத்து இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். டிராவிஸ் ஹெட் 163 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில், 25 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 6 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த மிட்செல் ஸ்டார்க் 5 ரன்களில் அக்ஷர் படேல் மூலமாக ரன் அவுட் செய்யப்பட்டார்.
ரிக்கி பாண்டிங் சதம் சாதனையை முறியடித்து, இந்தியாவிற்கு எதிராக 2000 ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித்!
அலெக்ஸ் கேரி 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உடன் 48 ரன்னிலும், நாதன் லயான் 9 ரன்னிலும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்கவே ஆஸ்திரேலியா 121.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்துள்ளது. இதில், 38 ரன்கள் எக்ஸ்டிரா மூலமாக கொடுக்கப்பட்டது. பந்து வீச்சு தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஷர்துல் தாக்கூரை எடுத்ததற்கு அவரால் முடிந்ததை செய்துவிட்டார் - 4 நோபால், 75 ரன்!