#ENGvsIND அடுத்தடுத்த ஓவர்களில் இங்கிலாந்து அணியின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய சிராஜ், பும்ரா..!

Published : Aug 07, 2021, 04:32 PM IST
#ENGvsIND அடுத்தடுத்த ஓவர்களில் இங்கிலாந்து அணியின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய சிராஜ், பும்ரா..!

சுருக்கம்

முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் அடுத்தடுத்த 2 ஓவர்களில் ரோரி பர்ன்ஸ் மற்றும் க்ராவ்லி ஆகிய இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினர் சிராஜ் மற்றும் பும்ரா.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் பும்ரா மற்றும் ஷமி முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அபாரமாக ஆடிய கேஎல் ராகுல் 84 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஜடேஜா 56 ரன்கள் அடித்தார். 

95 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் தொடங்கிய இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 25 ரன்களுக்கு 3ம் நாள் ஆட்டத்தை முடித்தது. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் ரோரி பர்ன்ஸை 18 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் முகமது சிராஜ். 16வது ஓவரில் பர்ன்ஸை சிராஜ் வீழ்த்த, அடுத்த ஓவரிலேயே ஜாக் க்ராவ்லியை பும்ரா வீழ்த்தினார். 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்த நிலையில், ரூட்டும் சிப்ளியும் இணைந்து ஆடிவருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?
சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!