மற்றொரு பெரிய வீரரும் காலி.. டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடரிலிருந்தும் விலகிய நட்சத்திர வீரர்! இங்கி.,க்கு மரண அடி

Published : Aug 05, 2021, 10:26 PM IST
மற்றொரு பெரிய வீரரும் காலி.. டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடரிலிருந்தும் விலகிய நட்சத்திர வீரர்! இங்கி.,க்கு மரண அடி

சுருக்கம்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர், இந்த ஆண்டு முழுவதும் இனி ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து அணியின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர். 2019 உலக கோப்பை, 2019 ஆஷஸ் தொடர் ஆகிய பெரிய தொடர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பவுலராக ஜொலித்த ஆர்ச்சர், கடந்த சில மாதங்களாகவே காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் ஐபிஎல் 14வது சீசனில் ஆடவில்லை. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஆடவில்லை.

அவரது முழங்கை காயத்திலிருந்து இன்னும் அவர் முழுமையாக மீளவில்லை. அதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்பதால், இந்த ஆண்டு முழுவதும் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் டி20 உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர் ஆகிய பெரிய தொடர்கள் நடக்கவுள்ள நிலையில், அந்த தொடர்களில் இருந்து எல்லாம் ஆர்ச்சர் விலகியுள்ளார்.

ஏற்கனவே ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்துள்ள நிலையில், ஆர்ச்சரும் ஆடாதது இங்கிலாந்து அணிக்கு மரண அடியாக இருக்கும்.
 

PREV
click me!

Recommended Stories

பங்காளி வங்கதேசத்திற்காக முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்..? உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் இழுபறி
T20 World Cup 2026: தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட வங்கதேசம்.. ஸ்காட்லாந்துக்கு ஜாக்பாட்!