ஹைதராபாத்தில் நடந்த பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் இந்திய அனியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா வரையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த 2006-07 ஆம் ஆண்டுகளில் முதல் முறையாக பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டது. C. K. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன் முதலில் 1994 இல் வழங்கப்பட்டது. இது ஒரு முன்னாள் வீரருக்கு BCCI வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2006-07 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பிசிசிஐ விருதுகள் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2020 முதல் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருது வழங்கியது.
இதில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல் இந்திய மகளிர் அணியின் ஆல் ரவுண்டரான தீப்தி சர்மா வரையில் சுப்மன் கில், ரவிச்சந்திரன் அஸ்வின், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்மிருதி மந்தனா, அக்ஷர் படேல், ஜெயதேவ் உனத்கட், ஷ்ரேயாஸ் ஐயர், மாயங்க் அகர்வால், முகமது ஷமி, பிரியா புனியா, ஷஃபாலி வர்மா, ஷப்பினேனி மேகனா, அமன்ஜோத் கவுர், ஜஸ்ப்ரித் பும்ரா, அண்டர்19 கேப்டன் உதய் சஹாரன் என்று பலரும் இந்த விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
விருது வென்றவர்களின் பட்டியல்: 2022 – 23
ஜக்மோகன் டால்மியா டிராபி
சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை (ஜூனியர் உள்நாட்டு) - வைஷ்ணவி சர்மா (மத்திய பிரதேசம்)
சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரர் (சீனியர் உள்நாட்டு) - நபம் யாபு (அருணாச்சல பிரதேசம்)
அதிக விக்கெட் டேக்கர் (U16 விஜய் மெர்ச்சன்ட்) - அன்மோல்ஜீத் சிங் (பஞ்சாப்)
அதிக ரன் எடுத்தவர் (U16 விஜய் மெர்ச்சன்ட்) - விஹான் மல்ஹோத்ரா (பஞ்சாப்)
எம்.ஏ.சிதம்பரம் டிராபி
அதிக விக்கெட் எடுத்தவர் (U19 கூச் பெஹார்) - மனவ் சோத்தானி (சௌராஷ்டிரா)
அதிக ரன் எடுத்தவர் (U19 கூச் பெஹார்) - டேனிஷ் மாலேவார் (விதர்பா)
அதிக விக்கெட் எடுத்தவர் (யு23 கர்னல். சிகே நாயுடு டிராபி) - விஷால் பி ஜெய்ஸ்வால் (குஜராத்)
அதிக ரன்கள் எடுத்தவர் (யு23 கர்னல். சி.கே. நாயுடு டிராபி) - ஷிதிஜ் படேல் (குஜராத்)
மாதவராவ் சிந்தியா விருது:
அதிக விக்கெட் எடுத்தவர் (ரஞ்சி டிராபி) - ஜலஜ் சக்சேனா (கேரளா)
அதிக விக்கெட் எடுத்தவர் (ரஞ்சி டிராபி) - மாயங்க் அகர்வால் (கர்நாடகா)
லாலா அமர்நாத் விருது:
சிறந்த ஆல்-ரவுண்டர் உள்நாட்டு வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டி - ரியான் பராக் (அஸ்ஸாம்)
சிறந்த ஆல்ரவுண்டர் ரஞ்சி டிராபி - சரண்ஷ் ஜெயின் (மத்திய பிரதேசம்)
BCCI உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அணி - சௌராஷ்டிரா (ரஞ்சி வெற்றி, விஜய் ஹசாரே, ஆண்கள் U19 டிராபி மற்றும் இரானி டிராபியில் 2ஆம் இடம்)
திலீப் சர்தேசாய் விருது:
அதிக விக்கெட் எடுத்தவர் (IND vs WI) – ரவிச்சந்திரன் அஸ்வின்
அதிக ரன் எடுத்தவர் (IND vs WI) - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சிறந்த சர்வதேச அறிமுகம் (மகளிர்) - அமன்ஜோத் கவுர்
சிறந்த சர்வதேச அறிமுக வீரர் (ஆண்கள்) - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை (மகளிர்) - தீப்தி ஷர்மா
பாலி உம்ரிகர் விருது:
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் (ஆண்கள்) – முகமது ஷமி (2019 - 20)
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் (ஆண்கள்) – ரவிச்சந்திரன் அஸ்வின் (2020 -21)
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் (ஆண்கள்) – ஜஸ்ப்ரித் பும்ரா (2021-22)
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் (ஆண்கள்) - சுப்மன் கில் (2022 -23)
கர்னல் சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது:
ஃபரோக் இன்ஜினியர் (2019 - 20) மற்றும் ரவி சாஸ்திரி...
Grateful for what WAS , what IS & what WILL be 🙏🏽🧿 pic.twitter.com/ijU4lcExZH
— Mayank Agarwal (@mayankcricket)