#INDvsENG இந்திய அணிக்கு செம குட் நியூஸ்..! முகமது ஷமி கம்பேக்

Published : Feb 07, 2021, 10:57 PM IST
#INDvsENG இந்திய அணிக்கு செம குட் நியூஸ்..! முகமது ஷமி கம்பேக்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கு நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி தயாராகிவிட்டார்.   

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கு நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி தயாராகிவிட்டார். 

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த ஏராளமான இந்திய வீரர்களில் ஷமியும் ஒருவர். மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட்டில் பாட் கம்மின்ஸின் பவுன்ஸரில் பேட்டிங் ஆடும்போது கையில் காயமடைந்தார் ஷமி. அதனால் ஆஸி.,க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் விலகிய ஷமி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இல்லை.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அகாடமியில் பயிற்சி பெற்றுவந்த ஷமி, பந்துவீசும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஷமியுடன், அவரைப்போலவே ஆஸி., தொடரில் காயமடைந்த மற்றொரு ஃபாஸ்ட் பவுலரான நவ்தீப் சைனியும் பந்துவீசுகிறார். எனவே 2 பேரும் பந்துவீசும் அளவிற்கு ஃபிட்டாகிவிட்டதால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இணைந்துவிடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Suryakumar Yadav: 'டீம்ல இருந்து தூக்குனதும் ஷாக் ஆகிட்டேன்' - சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!
WTC Final Race: ஆஸி, தென்னாப்பிரிக்கா முன்னிலை.. இந்தியாவுக்கு இன்னும் சான்ஸ் இருக்கா?