ஒரு மெல்லிய கோடு.. அந்த 2க்கும் இடையேயான வித்தியாசத்தை தெரிஞ்சுகிட்டா போதும்.! பண்ட்டுக்கு கவாஸ்கரின் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Feb 7, 2021, 10:09 PM IST
Highlights

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
 

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட் என்றெல்லாம் பார்க்காமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடிவருகிறார். ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் ஆடி இந்திய அணி தொடரை வெல்ல உதவினார்.

அதே ஃபார்மை இங்கிலாந்துக்கு எதிராகவும் தொடர்ந்துவருகிறார் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் அணியின் சீனியர் நட்சத்திர வீரர்களான ரோஹித், கோலி, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, புஜாராவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், அதிரடியாக ஆடி 88 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 91 ரன்கள் அடித்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

சமீபத்திய சிறப்பான ஆட்டத்தால் டெஸ்ட் அணியில் தனது இடத்தை தக்கவைத்துவிட்ட ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள கவாஸ்கர், ரிஷப் பண்ட் எப்போதுமே களிப்பூட்டும் வீரராகவே இருந்துவந்துள்ளார். அவர் பேட்டிங் ஆடும்போது மகிழ்ச்சியாக ஆடுகிறார். ரிஷப் பண்ட்டை பொறுத்தமட்டில், கவலைப்படாமல் ஃப்ரீயாக ஆடுவதற்கும்(carefree), கவனக்குறைவாக(careless) ஆடுவதற்கும் இடையேயான மெல்லிய கோடுதான். அந்த மெல்லிய கோட்டை ரிஷப் பண்ட் புரிந்துகொண்டால் அவரால் தொடர்ச்சியாக இன்னும் சிறப்பான ஆட்டத்தை ஆடமுடியும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!