விஜய் ஹசாரே தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

By karthikeyan VFirst Published Feb 7, 2021, 10:53 PM IST
Highlights

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடக்க தொடங்கிவிட்ட நிலையில், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் நடக்க தொடங்கிவிட்டன. உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்ட நிலையில், அடுத்ததாக ஒருநாள் தொடரான விஜய் ஹசாரேவை நடத்த திட்டமிட்டு, அதற்கான முழு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 20ம் தேதி முதல் மார்ச் 14ம் தேதி வரை விஜய் ஹசாரே போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பிப்ரவரி 20ம் தேதி தொடங்கும் லீக் போட்டிகள் மார்ச் ஒன்றாம் தேதி முடிகிறது. ஒரு வார கால இடைவெளிக்கு பின், மார்ச் 11ம் தேதி அரையிறுதி போட்டிகளும், 14ம் தேதி ஃபைனலும் நடக்கவுள்ளது.

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டியிருப்பதால், ஆறு இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து அணிகளும் அந்தந்த அணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஊருக்கு பிப்ரவரி 13ம் தேதியே சென்றுவிட வேண்டும். ஒருவாரம் குவாரண்டினுக்கு பிறகுதான் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும்.

எலைட் ஏ(சூரத்): குஜராத், சத்தீஸ்கர், திரிபுரா ஹைதராபாத், பரோடா, கோவா.

எலைட் பி(இந்தூர்): தமிழ்நாடு, பஞ்சாப், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், விதர்பா, ஆந்திரா.

எலைட் சி(பெங்களூரு): கர்நாடகா, உத்தர பிரதேசம், கேரளா, ஒடிசா, ரயில்வேஸ், பீகார்.

எலைட் டி(ஜெய்ப்பூர்): டெல்லி, மும்பை, மகாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், பாண்டிச்சேரி.

எலைட் இ(கொல்கத்தா): பெங்கால், சர்வீஸஸ், ஜம்மு காஷ்மீர், சவுராஷ்டிரா, ஹரியானா, சண்டிகர்.

பிளேட்(தமிழ்நாடு): உத்தரகண்ட் நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மிசோரம், சிக்கிம்.
 

click me!