
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று முஸ்லீம் பண்டிகையான ரம்ஜான் விழாவை ஒவ்வொரு அணியில் உள்ள முஸ்லீம் வீரர்கள் இணைந்து கொண்டாடிவருகின்றனர்.
ஐபிஎல் 15வது சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளைகுவித்துவருகின்றன. இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர் வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஐபிஎல்லில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு ஆடுகிறது.
இந்நிலையில், இன்று ரம்ஜானை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முகமது ஷமி, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஷீத் கான் ஆகியோர் இணைந்து ரம்ஜானை கொண்டாடினர். ரஷீத் கான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய ஆஃப்கானிஸ்தான் வீரர்களுடன் இணைந்து முகமது ஷமி ரம்ஜானை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.