5 வருட ஐபிஎல் ஊதியத்தை மொத்தமா கொடுத்து மும்பையில் கனவு இல்லத்தை வாங்கிய பிரித்வி ஷா

Published : May 03, 2022, 03:19 PM IST
5 வருட ஐபிஎல் ஊதியத்தை மொத்தமா கொடுத்து மும்பையில் கனவு இல்லத்தை வாங்கிய பிரித்வி ஷா

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸ் அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷா, மும்பையில் தனது கனவு இல்லத்தை பெருந்தொகைக்கு வாங்கியுள்ளார்.  

22 வயதான இளம் அதிரடி வீரர் பிரித்வி ஷா. 2018ம் ஆண்டு இந்தியாவிற்கு அண்டர் 19 உலக கோப்பையை வென்று கொடுத்த பிரித்வி ஷா, அதே ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். ஆனால் காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை.

ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக கடந்த சில சீசன்களாக அபாரமாக விளையாடிவரும் பிரித்வி ஷா, இந்த சீசனிலும் அடித்து ஆடிவருகிறார்.

இந்நிலையில், மும்பை பாந்த்ரா பகுதியில் பிரித்வி ஷா 8வது மாடியில் வீடு ஒன்றை ரூ.10.5 கோடிக்கு வாங்கியுள்ளார் பிரித்வி ஷா. 2209 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன.

பிரித்வி ஷா 5 ஆண்டுகாலம் ஐபிஎல்லில் சம்பாதித்த தொகையை மொத்தமாக கொடுத்து வீடு வாங்கியுள்ளார். 2018 ஐபிஎல்லில் பிரித்வி ஷாவை ரூ.1.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்த டெல்லி கேபிடள்ஸ் அணி, 2021 ஐபிஎல் வரை அதே தொகைக்கு தக்கவைத்திருந்தது. மெகா ஏலத்தில் பிரித்வி ஷாவை ரூ.7.5 கோடிக்கு எடுத்தது. ஐபிஎல்லில் இதுவரை மொத்தமாக பனிரெண்டரை கோடி ரூபாய் சம்பாதித்துள்ள பிரித்வி ஷா, ரூ.10.5 கோடிக்கு கனவு இல்லத்தை வாங்கியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?