GT vs PBKS: குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒரு மாற்றம்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 03, 2022, 02:44 PM IST
GT vs PBKS: குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒரு மாற்றம்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும்நிலையில், வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்குகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேற வேண்டுமானால் தொடர் வெற்றிகளை பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் பஞ்சாப் அணியும் வெற்றி வேட்கையில் களமிறங்குகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். பிரதீப் சங்வானுக்கு பதிலாக யஷ் தயால் சேர்க்கப்படலாம்.

உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி, யஷ் தயால்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஷிகர் தவான், மயன்க் அகர்வால், ஜானி பேர்ஸ்டோ, பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் ஷர்மா, அர்ஷ்தீப் சிங்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!